காலையிலே சோகம்! பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்! 3 பேர் பலி ! சோகத்தில் ராணுவ அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


அருணாச்சலபிரதேசத்தின் பகுதியில் இந்திய ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தில் 3 வீரர்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிரானெடியர்ஸ் ரெஜிமெண்ட் பிரிவை சேர்ந்த இந்திய ராணுவத்தின் ராணுவ வீரர்கள் அருணாச்சலபிரதேச எல்லையில் பாதுகாப்புப்பணியை நிறைவு செய்துவிட்டு ராணுவ வாகனத்தில் அசாமின் ஜோர்ஹட் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

நேற்று அருணாச்சலபிரதேசத்தின் அப்பர் சுபன்ஸ்ரீ மாவட்டம் தபி கிராமத்தில் மலைப்பாங்கான பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனதில் சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளதனாக கூறப்படுகிறது.

இந்த விபத்து சம்பவத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும், 5 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில், தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலென்ஸ் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக அழைத்து சென்றனர்.

காயமடைந்த 5 பெரும் மருத்துவமனையில் திவீர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Army vehicle overturned in a ditch accident 3 people died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->