பெண்ணுக்கு ஆசை வார்த்தைகள் கூறி மது அருந்த வைத்து கற்பழித்த நபர் கைது! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜயினி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை சாலையில் உள்ள நடைபாதையில் வைத்து ஒருவர் பாலியல் கொடூரம் செய்துள்ளார். அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் அறிந்த போலீசார் பெண்ணை கற்பழித்த லோகேஷ் என்ற நபரிடம் விசாரணை நடத்தி  அவரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, லோகேஷ் அந்த பெண்ணிடம் தான் திருணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த பெண்ணை ஏமாற்றி மது ஊற்றிக்கொடுத்து போதை நிலைக்கு கொண்டுவந்துள்ளார்.

பிறகு, அந்த பெண் போதையில் இருந்த நிலையில் லோகேஷ் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்த வழியாக சாலையில் சென்று கொண்டு இருந்த சில பேர் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தின் போது லோகேஷ் அந்த பெண்ணை தாக்கி, இங்கு நடந்த விஷயத்தை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து லோகேஷை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrested for raping a woman by forcing her to drink alcohol


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->