சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்களை பிரசாரத்தில் ஈடுபட அனுமதிக்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொலி மூலமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் மாணவர் அமர்ஜித் குப்தா மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், "தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசியல் தலைவர்களை கைது செய்யக்கூடாது என்று கூறினால் வன்புணர்வு, கொலை உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் கட்சித் தொடங்க ஆரம்பித்து விடுவார்கள். இது கேலிக்கூத்தாகிவிடும்.

விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது. தவிர, இது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இதில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. ஏன் நீதிமன்றத்தை அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவாலை? விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இன்னொருவர், அவரை விடுவிக்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்கிறார். நீதிமன்றம் சட்ட முறைப்படியே செயல்படும். நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arrested political leaders not allowed election campaighn delhi high court order


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->