பாஜகவில் இணைந்த காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவர்.!  - Seithipunal
Seithipunal


60 இடங்களைக் கொண்ட அருணாசல பிரதேசம் மாநில சட்டசபையில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த மாநிலத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. 

இந்தத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கிடையே காங்கிரசின் 2 எம்.எல்.ஏ.க்கள் கடந்த வாரம் பாஜகவுக்கு தாவினர். இந்த நிலையில், கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங், நேற்று காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். 

மொத்தமுள்ள நான்கு எம்.எல்.ஏ.க்களில் மூன்று பேர் பாஜகவுக்கு சென்றுள்ள நிலையில், தற்போது முன்னாள் முதலமைச்சர் நபம் துகி மட்டுமே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இதேபோன்று ஒடிசாவில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய பிஜு ஜனதா தள எம்.எல்.ஏ.வுமான பிரேமானந்த நாயக்கும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நரேன் பல்லை மற்றும் ராஜேந்திர குமார் தாஸ் உள்ளிட்டோரும் தங்கள் ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arunachal pradesh congress assembly committee leader lambo dayeng joined bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->