அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமினை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்றம்! காரணம் என்ன?
Arvind Kejriwal bail suspends Delhi High Court
டெல்லி மதுபான கொள்கை பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. இதனால் இன்று சிறையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஜாமீன் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அவர் சிறையில் இருந்து வெளியில் வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவருக்கு சிறந்த வரவேற்பு கொடுக்க ஆம் ஆத்மி கட்சியினர் தயாராகி இருந்தனர். மக்களவைத் தேர்தலின் போது உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Arvind Kejriwal bail suspends Delhi High Court