பண மோசடி வழக்கு...அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
Arvind Kejriwal court custody extension
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தன்னை கைது செய்தது சட்ட விரோதம் என உத்தரவிட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற கொண்டிருக்கும் போது மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் பெற்று வெளியில் வந்தார்.
பின்னர் கடந்த 2 ஆம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதை அடுத்து அவரது நீதிமன்ற காவலை ஜூன் 3 ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மருத்துவ பரிசோதனைக்காக இடைக்கால ஜாமினை ஒரு வாரத்திற்கு நீட்டிக்க உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
Arvind Kejriwal court custody extension