லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்த அசாம் காவல்துறை.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் லஞ்சம் வாங்கியதாக இரண்டு அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் மோரிகயோன் பகுதியை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் தீப்ருஹர் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினர் அதிரடியாக மேற்கொண்ட சோதனையில் இந்த இரண்டு அரசு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து காவல்துறை தலைமை இயக்குனர் ஜிபி சிங் தெரிவித்துள்ளதாவது,

"அசாம் மாநிலத்தில் லஞ்சம் பெற்றுள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு அரசு அதிகாரிகள் மீதும் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். இதனை தொடர்ந்து லஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளுக்கு எதிரான எங்களது இந்த கைது நடவடிக்கை தொடரும்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Police arrest government employees for bribe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->