அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றி! முருகனுக்கு அரோகரா... விஜய், அண்ணாமலை தைப்பூசம் வாழ்த்து!
Thai Poosam TVK Vijay BJP Annamalai
உலகம் முழுவதும் இன்று தமிழர்களால் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுளான முருகன் கோவில்களில் குவிந்து வரும் பக்தர்கள், காவடி எடுத்து, முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் தைப்பூசத் திருநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில்,
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!
இதேபோல் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Thai Poosam TVK Vijay BJP Annamalai