அர்ச்சகர்களை அவமானப்படுத்தும் ‘திராவிட மாடல்’ - கொந்தளிக்கும் பாஜக! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணை தலைவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அர்ச்சகர்கள் தட்டில் விழும் பணத்தை கோயில் உண்டியலில் போட்டு விட வேண்டும் என உத்தரவிடுவது வக்கிரத்தின் வெளிப்பாடு. அர்ச்சகர்களுக்கு அரசு சம்பளம் வழங்க மறுப்பதற்கு காரணம், அரசுக்கு அதற்கு உரிமை இல்லை என்பதால் தான். 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்களாகலாம் என்று உத்தரவு பிறப்பித்த அரசு, அர்ச்சகர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் என ஏன் அறிவிக்கவில்லை? நீதி மன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கிய பிறகும் தன் போக்கை மாற்றிக்கொள்ள மறுக்கிறது அரசு.

மலிவான சிந்தனை கொண்டிருக்க கூடிய ‘திராவிட மாடல்’ அதிகார வர்க்கம் அர்ச்சகர்களை பல்வேறு வகையில் அவமானப்படுத்திக் கொண்டே இருந்தாலும்,  தங்கள் கடமையிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதற்கு காரணம் ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்கிற உன்னத நோக்கம் மட்டுமே. 

பணம் அனைவருக்கும் தேவை தான். அந்த கடவுளுக்கு செலுத்தும் காணிக்கையாக எண்ணித்தான் பக்தர்கள் தட்டில் பணம் அளிக்கிறார்கள். ஆனால், யாரையும் அவர்கள் கட்டாயப்படுத்துவதில்லை. இந்நிலையில், பணம் செலுத்தக்கூடாது என்ற உத்தரவை மேலும் ஹிந்து சமய அறநிலையத் துறை வலியுறுத்தினால், தீவிரப்படுத்தினால், அதையும் ஏற்றுக்கொண்டே தங்களின் கடமையை செய்வார்கள் அர்ச்சகர்கள்.

இது அர்ச்சகர்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல, மக்களின் நம்பிக்கைகளை சிதைக்கும் ‘திராவிட மாடல்’ சித்தாந்தம். என்னை பொறுத்தவரை இது போன்ற அவமானங்கள் தொடர்ந்தால், ஹிந்து அறநிலையத்துறை ஆக்கிரமித்திருக்கும் கோவில்களில் உள்ள அர்ச்சகர்கள் தன்மானத்தோடு நடந்து கொண்டு, வேறு எங்காவது தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். அப்போது தான் மக்கள் உண்மையை உணர்வார்கள்.

பொது மக்களின் சொத்தான கோவில்களின் நிர்வாகத்தில், இறைவனின் வழிபாட்டில் அத்துமீறி செயல்படும் அதிகார வர்க்கத்தை மக்களே பார்த்துக் கொள்ளட்டும்" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Narayanan Condemn to DMK Archagar issue


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->