#BREAKING:: சிக்கிமில் மீண்டும் பனிச்சரிவு.. மீட்பு பணியில் தொய்வு..!!
Avalanche again in Sikkim
சிக்கிம் மாநில தலைநகர் ஆங்காங் மற்றும் நாதுலா இடையே சாங்கு சாலையில் 17 மைல்கள் தொலைவில் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் 150 சுற்றுலாப் பயணிகள் சிக்கிய நிலையில் 7 பேர் உயிரிழந்தனர்.
சிக்கிம் மாநிலத்தில் நேற்று இரவு முதல் கிழக்கு சீக்கிமின் நாதுலா, பாபாமந்திர், சாங்கு பகுதிகளில் ஆங்காங்கே பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் 15 மைல்கள் மேல் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனை மீறி இன்று காலை பனிப்பொழிவு பற்றி தகவல் கிடைத்தவுடன் சுற்றுலா பயணிகள் குழு சாங்குவுக்கு புறப்பட்டு சென்றனர்.
அப்பொழுது ஏற்பட்ட பனிச்சரிவில் சுமார் 80க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பனிக்கு கீழ் புதையுன்டதாக சிக்கிம் மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம் அடுத்த 24 மணி நேரத்தில் குப்வாரா மாவட்டத்தில் பனிச்சரிவு எச்சரிக்கை வெளியிட்டு இருந்தது.
அந்த எச்சரிக்கையின் படி பனிச்சரிவு எச்சரிக்கை குறைந்த அபாயம் கொண்டிருப்பதாகவும் குப்வாரா பகுதியில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அடுத்த உத்தரவு வரும் வரை பணிச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீட்பு பணி நடைபெற்று வந்த பகுதியில் மீண்டும் தற்பொழுது பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காங்டாக் நாதுல்லா சாலையில் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்பொழுது சுனக்கம் ஏற்பட்டுள்ளது.
சிக்கிம் மாநில பனிச்சரிவில் உயிரிழந்த அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர்டர் பக்கத்தில் "சிக்கிமில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், NDRF இன் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு விரைவில் சென்றடையும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
English Summary
Avalanche again in Sikkim