அயன் திரைப்பட பாணியில் ரூ. 9.73 கோடி கொகைன் மாத்திரைகள் கடத்தல்!... கையும் களவுமாக பெண் கைது! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜா சர்வதேச விமான நிலையத்தில் கொகைன் நிரப்பப்பட்ட 124 மாத்திரைகளை வயிற்றில் வைத்துக் கடத்த முயன்ற பிரேசிலைச் சேர்ந்த பெண்ணை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெஜெ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவிக்கையில்,  தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் பிரேசில் நாட்டை சேர்ந்த அந்தப் பெண் ரூ. 9.73 கோடி மதிப்புள்ள 973 கிராம் அளவிலான 124 கொகைன் நிரப்பப்பட்ட மாத்திரைகளை வயிற்றில் கடத்தி வந்தாக கூறியுள்ளனர்.

மேலும், போதைப் பொருள்  தடுப்புச் சட்டத்தின் கீழ் சோதனையில் அவற்றைக் கைப்பற்றியதாக தெரிவித்த அதிகாரிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடன் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணிற்கு சர்வதேச தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayan movie style Rs Smuggling of 9.73 crore cocaine pills Woman arrested red handed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->