அயோத்தி ராமர் கோவிலின் முதல் ஆண்டு பெருவிழா ; ஜனவரி 11ல்..! - Seithipunal
Seithipunal


அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை முதல் ஆண்டு விழா எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

அயோத்தியில் கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி பிரமாண்ட ராமர் கோவிலை திறந்து வைத்தார். 

இந்நிலையில், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ஸ்ரீ ராம் லல்லா விக்ரஹாவின் பிராண பிரதிஷ்டையின் முதல் ஆண்டு விழா வரும் ஜனவரி 11, 2025 அன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது,

இது குறித்து, கோவில் நிர்வாகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை முதல் ஆண்டு விழா வரும் 2025ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி கோலாகமாக கொண்டாடப்பட உள்ளதாகவும், பிரதிஷ்டா துவாதசி அன்று பல்வேறு சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்துள்ளது..

இந்த விழாவை முன்னிட்டு அன்று காலை 8 மணி முதல் 11 மணி மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை யக்ஞ மண்டபத்தில் யஜுர்வேத மந்திரங்களுடன் கூடிய அக்னி ஹோத்ரம் நடைபெறவுள்ளது. 

மேலும் 6 லட்சம் ராம் மந்திர பாராயணம், ராம் ரக்ஷா ஸ்தோத்ரா, ஹனுமான் சாலிசா பாராயணம் போன்ற நிகழ்வுகளும் நடைபெறுஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கோவிலின் தரை தளத்தில் ராக சேவா, ராம்சரித்மனாஸின் இசை பாராயணம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ராம்சரித்மனாஸ் பற்றிய சொற்பொழிவுகள் மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறு உள்ளதோடு, பல்வேறு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து காலை முதல் பக்தர்களுக்கு ஸ்ரீராமரின் பிரசாதம் விநியோகம் செய்யப்பட இருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayodhya ram temple 1st year celebration on january 11


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->