அயோத்தி ராமா் கோயில் தரிசன நேரத்தில் திடீர் மாற்றம்! - Seithipunal
Seithipunal


அயோத்தி ராமர் கோவிலில் நாள்தோறும் பிற்பகலில் 1 மணி நேரம் நடை அடைக்கப்படும் என தலைமை பூசாரி அறிவித்துள்ளார். 

உத்தர பிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து ராமர் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ராமர் கோவில் பிரதிஷ்டைக்கு முன்பு 2 மணி நேர இடைவேளை மற்றும் காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை தரிசன நேரம் என நினைக்கப்பட்டிருந்தது. 

ஆனால் தினமும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவதால் ராமர் கோவிலில் முதல் நாளிலிருந்து கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. 

இதனால் நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ராமர் கோவிலின் தரிசன நேரம் மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

அதாவது, நேற்று முதல் நாள்தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1:30 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என தலைமை பூசாரி தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya Ram temple darshan time change 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->