அயோத்தி ராமர் கோயிலுக்கு பிரம்மாண்ட பூட்டு - எடை மட்டும் எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் அலிகர் பகுதியைச் சேர்ந்த பூட்டு தயாரிக்கும் மூத்த கலைஞர் ஒருவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு 400 கிலோ எடை கொண்ட ஒரு பிரம்மாண்டமான பூட்டை தயாரித்துள்ளார். 

அடுத்த ஆண்டு ஜனவரியில் அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலவிதமான பொருட்கள் ராமர் கோவிலுக்கு நன்கொடையாக ஏராளமான பக்தர்கள் முன் வந்து அளித்துள்ளதாக ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த சித்ரா சேத்ரா அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ராமர் கோவிலுக்கு நன்கொடை வழங்க உத்தர பிரதேசம் அலிகர் நகரில் உள்ள பூட்டு தயாரிக்கும் மூத்த கலைஞர் சத்ய பிரகாஷ் சர்மா என்பவர் தனது கையால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய பூட்டு ஒன்றை தயாரித்துள்ளார். 

இந்த பூட்டின் உயரம் சுமார் 10அடி, அகலம் 4.5 அடி, தடிமன் 9.5 அங்குலம். இதன் எடை 400 கிலோ ஆகும். இதன் சாவியின் நீளம் மட்டுமே 4அடி. 

இது குறித்து ராம பக்தரான சத்திய பிரகாஷ் சர்மா தெரிவிக்கையில், ''ஒரு நூற்றாண்டுக்கு மேலாக எங்கள் குடும்பத்தினர் பூட்டு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 

பூட்டு நகரம் என்று அழைக்கப்படும் அலிகர் நகரில் நான் 45 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டு தயாரித்து வருகிறேன். பிரம்மாண்ட பூட்டு ஒன்றை ராமர் கோவிலுக்காக தயாரித்துள்ளேன். 

இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த பூட்டு அலிகர் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தற்போது இதில் சிறு சிறு மாற்றங்கள் செய்து வருகிறேன். அன்பின் வேலையாக இந்த பூட்டு தயாரிப்பை கருதுகிறேன். 

இந்த பூட்டு தயாரிப்பில் எனது மனைவி ருக்மணியும் எனக்கு உதவியாக இருந்தார். இதை தயாரிக்க சுமார் 2 லட்சம் செலவானது. இந்த பூட்டை எனது வாழ்நாள் சேமிப்பை எல்லாம் செலவு செய்து தயாரித்துள்ளேன். எனது கனவு இதன் மூலம் நினைவாகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayodhya Ram temple grand lock


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->