அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா: பிரசவத்துக்கு நாள் குறித்த கர்ப்பிணி பெண்கள்! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற 22 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும், பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், ஆளும் கட்சியினர், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். 

இந்நிலையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 15 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் உத்தர பிரதேசம், கான்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. 

ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்திற்கு பிறகு பிரசவிக்க உள்ள கர்ப்பிணி பெண்கள் 35 பேர் ராமர் கோவில் திறப்பு விழா அன்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற மருத்துவமனையில் விண்ணப்பித்துள்ளனர். 

மேலும் மருத்துவமனையில் நாளொன்றுக்கு 15 அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படும் நிலையில் வருகின்ற 22 ஆம் தேதி மட்டும் 35 கர்ப்பிணி பெண்கள் அறுவை சிகிச்சை செய்வதாக திட்டமிட்டுள்ளனர். 

ராமர் கோவில் திறப்பு விழா அன்று பிரசவம் செய்து கொள்ள விரும்பிய கர்ப்பிணி பெண் தெரிவித்திருப்பதாவது, 'வருகின்ற 17ஆம் தேதி எனது குழந்தை பிறக்கும் என மருத்துவர்கள் தேதி கொடுத்துள்ளனர். ஆனால் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை நாளில் எனது குழந்தை பிறக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இதனால் எனது குழந்தை வெற்றியும், பெருமையும் பெரும் என நம்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ayodhya ram temple strange request pregnant women


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->