அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் மழைநீர்... அதிகாரிகள் இடைநீக்கம்.!  - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தியில் இந்து மத கடவுள் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு கடந்த ஜனவரி 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து ராமர் கோவிலில் வழிபாடு செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலின் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். 

சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்த போது ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில் மழை நீர் தேங்கியதால் பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. 

அதேபோல் ராமர் கோவில் செல்லும் பாதையில் உள்ள சாலைகளின் வளைவுகளிலும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

இந்நிலையில் ராமர் கோவில் செல்லும் வழி மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கிய சம்பவம் தொடர்பாக உத்திர பிரதேச அரசு 6 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்துள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayodhya Ram Temple way Rainwater Officials suspended


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->