நாட்டை உலுக்கிய பாபா சித்திக் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளியை கைது செய்த போலீசார்!
Baba Siddiqui murder case that shook the country Police arrested the main culprit
மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாபா சித்திக் கடந்த மாதம் 12 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கொலைக்கான பின்னணி குறித்து மேற்கொண்ட விசாரணையில், சிறையில் இருக்கும் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் சம்பந்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 3 பேர் கொலையில் நேரடியாக ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷிவ் குமார் தலைமறைவாகியிருந்த நிலையில், மும்பை போலீசார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பரரைச் பகுதியில் ஷிவ் குமார் மற்றும் அவரின் இரு கூட்டாளிகள் நேபாளத்திற்கு தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் போது, லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயின் அறிவுரையின்படி பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதாக குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.
English Summary
Baba Siddiqui murder case that shook the country Police arrested the main culprit