விரைவில் 3-ம் உலகப்போர்?...அமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் - பகிரங்க எச்சரிக்கை விடுத்தது ரஷ்யா!
World war 3 soon missile attack on america russia issued public warning
கடந்த 2022-ம் ஆண்டு நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி, ஆயுத உதவிகள் அளித்து வருவதால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது.
இரண்டு அரை ஆண்டுகளைக் கடந்தும் உக்ரைன் - ரஷியா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதற்கிடையே, ரஷியா மீது தொலைதூரம் சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அனுமதி அளித்துள்ளார். அந்த வகையில், 275 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்தது. இதில், ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளதாவது, தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த ஏவுகணை வழங்கும் நாடுகள் மீது போர் தொடுக்கப்படும் என்று அமெரிக்காவை மறைமுகமாக எச்சரித்துள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனையை மேற்கத்திய நாடுகள் உலகப் போராக மாற்ற முயற்சி செய்வதாக குற்றம் சட்டி உள்ளார்.
English Summary
World war 3 soon missile attack on america russia issued public warning