நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க ராகுல் காந்தி முயற்சி!...பா.ஜ.க. பரபரப்பு குற்றச்சாட்டு! - Seithipunal
Seithipunal


தொழிலதிபர் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது, தொழில் துறையில் தற்போது மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, அதானி மீது லஞ்ச புகார்கள் உள்ள நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் அவர் சுதந்திரமாக வலம் வருவதாகவும்,  இந்த புகாரில் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக கூறினார்.

மேலும், அதானி முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவை உடனே அமைக்க வேண்டும் என்றும், தொழிலதிபர் அதானி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று பேசி இருந்தார்.

இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளதாவது,  மோடி பிரதமராக இருப்பதால், நாட்டின் பொருளாதாரம் வலுவடைவதை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ், அபாண்டமான அனைத்து வகையான குற்றச்சாட்டுகளை கூறி இந்திய பொருளாதாரத்தை குறிவைக்க ராகுல் காந்தி முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul gandhi attempt to destabilize the country economy allegation sensational


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->