திறந்த வெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை -மாநில அரசு அதிரடி.! - Seithipunal
Seithipunal


மாநிலம் முழுவதும் திறந்த வெளியில் முட்டை மற்றும் மாமிசம் விற்பனை செய்ய தடை விதித்து மாநிலத்தின் முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றதையடுத்து மாநிலத்தின் முதலமைச்சராக மோகன் யாதவ் பதவியேற்றார். இந்த நிலையில், இவரது தலைமையில் முதலமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி மாநிலம் முழுவதும் திறந்த வெளியில் முட்டை மற்றும் மாமிசம் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மேலும், மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பொதுமக்களிடம், மாநில அரசின் உணவுத்துறை சார்பில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban egg and meat selling open place in madhya pradesh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->