ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு தடை - மத்திய சுற்றுசூழல் அமைச்சகம்..! - Seithipunal
Seithipunal


ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை தடைவிதிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள தெரிவிக்கையில்,

2021 ஆகஸ்டு மாதம் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருள்களை ஜூலை 1-ந்தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்தல் போன்றவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது.

உதாரணமாக பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்டிரா, ஸ்பூன் போன்றவையும் இந்த தடையில் அடங்கும். இவை தவிர, பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பி.வி.சி. பேனர்கள் ஆகியவையும் அடங்கும்.

அதனால், ஜூலை 1-ந் தேதிக்கு முன்னர் வணிகர்கள் இந்த பொருட்களின் இருப்பை பூஜியம் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது. அதனையும் மீறி இந்த பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban on disposable plastic products from July 1


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->