போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காதல் ஜோடி - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.!
fifteen days court custody to couples for clash with police officer
மெரினா இணைப்பு சாலையில், வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரிடம் காரில் வந்த ஆண்-பெண் ஜோடி தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக பேசி சண்டை போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
அதன் படி நடத்தப்பட்ட விசாரணையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிலம்பரசன் என்பவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது காரில் வந்த அந்த ஜோடியை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்துள்ளார். அப்போதுதான், அந்த மோதல் காட்சி நடந்துள்ளது. இதனை சக போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரர் சிலம்பரசன் அளித்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில், சிலம்பரசனிடம் சண்டைபோட்டுவிட்டு தப்பி ஓடிய அந்த ஜோடி வேளச்சேரியை சேர்ந்த சந்திரமோகன் - தனலட்சுமி என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் துரைப்பாக்கம் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தது தெரிய வந்தது.
உடனே விரைந்துச் சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து அழைத்து வந்தனர். அவர்கள் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றம் மெரினா கடற்கரையில் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேளச்சேரி சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
English Summary
fifteen days court custody to couples for clash with police officer