அயோத்தியில் மது விற்பனைக்கு தடை - காரணம் என்ன?
ban on liquar sales in uttar pradesh ayodhi
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவதற்கு வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல், 543 மக்களவை தொகுதியில் இருந்தும் ராமர் கோயிலுக்கு பக்தர்களை அழைத்துச் செல்ல பாஜக திட்டமிட்டுள்ளதால் அயோத்தியில் நாளொன்றுக்கு சுமார் 50000 முதல் 1 லட்சம் பேர் ஒன்று கூட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் கோசி பரிக்ரமா பகுதியில் உள்ள மதுக்கடைகள் முழுவதும் அகற்றப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மது விற்பனைக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட உள்ளதாக அம்மாநில கலால் துறை அமைச்சர் நிதின் அகர்வால் தெரிவித்துள்ளார்.
English Summary
ban on liquar sales in uttar pradesh ayodhi