திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் இன்று முதல் தடை.! - Seithipunal
Seithipunal


திருமலையில் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் இன்று முதல் தடை விதித்து தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள திருப்பதி ஒரு வைணவ தலமாகும். திருப்பதி இந்தியாவிலுள்ள மிக முக்கிய திருத்தலங்களில் ஒன்று. உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் பெறுவார்கள்.

இந்நிலையில் திருமலையில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பைகள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சோதனைச்சாவடியில் ஆய்வு செய்த பிறகே, பிளாஸ்டிக் இல்லாத பொருட்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டு விற்கும் தின்பண்டங்கள் மற்றும் ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் பார்சலுக்கு, பிளாஸ்டிக் பையில் அடைத்து விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ban on plastic products in Tirupati tirumala


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->