நைஸ் ரோட்டில் நாளை முதல் இருசக்கர வாகனங்களுக்கு தடை.! வழிப்பறி, கொள்ளை, விபத்து சம்பவங்கள் எதிரொலி.!
bangalore nice road new rule
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமான பெங்களூர் நகரில் தற்போது ஒரு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக அமைக்கப்பட்ட நைஸ் ரோட்டில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரின் சாலை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நைஸ் ரோடு அமைக்கப்பட்டது. ஆனால், இந்த சாலையில் இரவு 10 மணிக்கு மேல் அதிக விபத்துகளும், கொலை மற்றும் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
மேலும், இருசக்கர வாகனங்களால் கார் - லாரி உள்ளிட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வரும் நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வருகிற 16-ஆம் தேதி முதல் (நாளை முதல்) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்கள் நைஸ் ரோட்டில் செல்வதற்கு தடை விதிப்பதாக, போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
bangalore nice road new rule