இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தினர்.! - Seithipunal
Seithipunal


உரிய அனுமதியின்றி இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு சிறுவர்கள், ஒரு பெண் உள்பட வங்கதேசத்தினர் 10 பேரை போலீஸார் கைது செய்த நிலையில், இருநாட்டுக்கு இடையில் பேச்சுவார்த்தைக்கு பின் அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதுகுறித்து, அசாம் மாநில காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல், வங்கதேசத்தினர் 10 பேர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

இவர்களில் நான்கு பேரை கோலகாட் மாவட்ட ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மீதம் உள்ள ஆறு பேரும் கரீம் கஞ்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர். 

இவர்கள் அனைவருமே வேலை தேடி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள். இவர்களை விடுவிப்பது குறித்து இந்திய மற்றும் வங்கதேச அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

கடந்த இரு தினங்களுக்குமுன்  நடந்த இந்த இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு காணப்பட்டதையடுத்து, பிடிபட்ட 10 பேரும் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் எல்லைப் பகுதியில் வங்கதேச எல்லை காவல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்" என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bangladesh illegal trespassed into India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->