பெங்களூருவில் மீண்டும் ஒரு கொடூரம்: வங்கதேச இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை!
Bangladesh woman Bengaluru murder case
பெங்களூருவில் வங்கதேசத்தைச் சேர்ந்த 28 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கெரே ஏரி அருகே நேற்று காலை அப்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் பணிபுரிந்த குடியிருப்பிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உடல் கிடந்துள்ளது.
ஆறு வருடங்களாக பெங்களூரில் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த அவர், ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியிருப்பில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் முதல் காணாமல் போன அவரை, மாலை வரை தேடிய கணவர் பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளார். மறுநாள் காலை ஏரி அருகே உடல் கண்டெடுக்கப்பட்டது.
பிரேத பரிசோதனையில், அப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குற்றவாளி கல்லை சரியாக தூக்க முடியாததால் முகம் சிதைக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். பெண்ணுக்குத் தெரிந்தவரே குற்றவாளியாக இருக்கலாம் எனவும், பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அப்பெண்ணுக்கு பாஸ்போர்ட் இல்லை என்றும், அவர் சட்டவிரோதமாக வந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Bangladesh woman Bengaluru murder case