அடுத்தடுத்து 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.! ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு.!
Bank Leave Days For March 2023
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா நாடு முழுவதும் இருக்கின்ற வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்களை அறிவித்து வருகின்றது. அந்தவகையில் வரும், மார்ச் மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பண்டிகைகள் அனைத்தும், மாநிலம் மற்றும் மதம் சார்ந்த பண்டிகைகள் மற்றும் பொது பண்டிகைகள் ஆகியவையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதோ அதற்கான பட்டியல் :
மார்ச் 3 ல் வெள்ளிக்கிழமை மணிப்பூர் மாநிலத்தில் சாப்சார் குட் காரணமாக விடுமுறை.
மார்ச் 5 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 7 - செவ்வாய்க்கிழமை ஹோலி பண்டிகையின் காரணமாக விடுமுறை
மார்ச் 8- புதன்கிழமை துலேட்டி/டோலியாத்ரா/ஹோலி/யோசங் பண்டிகைகளால் விடுமுறை.
மார்ச் 9 -வியாழக்கிழமை பீகாரில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை.
மார்ச் 11 -2வது சனிக்கிழமை
மார்ச் 12 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 19 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 22 - புதன்கிழமை (குடி பத்வா/உகாதி பண்டிகை/பீகார் திவாஸ்/சாஜிபு நோங்மபான்பா (செய்ரோபா)/தெலுங்கு புத்தாண்டு தினம்) உள்ளிட்டவற்றின் காரணமாக விடுமுறை.
மார்ச் 25 - 4 வது சனிக்கிழமை
மார்ச் 26 - ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 30, வியாழக்கிழமை ஸ்ரீ ராம நவமியால் விடுமுறை.
English Summary
Bank Leave Days For March 2023