ரூ.1.4 கோடி தடை செய்யப்பட்ட இருமல் டானிக் பென்செடைல் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


வங்கதேச எல்லையில், ரூ.1.4 கோடி மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட இருமல் டானிக் பாட்டில்களை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இந்தியா-வங்கதேச எல்லைக்கு அருகே,  சுரங்கம் அமைத்து பதுக்கி குறித்த இருமல் டானிக் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்துள்ளனர். இங்கு கடத்தப்படுகின்ற பொருட்களை பாதுகாப்பாக வைக்க அமைக்கப்பட்ட சுரங்கம் போன்ற நிலத்தடி தொட்டிகளை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.

அதில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.4 கோடி மதிப்புள்ள 62,200 தடைசெய்யப்பட்ட இருமல் டானிக் பென்செடைல் பாட்டில்களைக் கைப்பற்றினர். இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:

எங்களுக்கு கிடைத்த உளவுத்துறையின் இந்த நடவடிக்கையின் போது, ​​மூன்று நிலத்தடி சுரங்க அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அடர்ந்த மரங்களுக்கு அடியில் இத்தகைய சுரங்க அமைப்பு இருந்தது. சுரங்கத்தினுள் ஒளி புகாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடத்தல்காரர்கள் செய்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இருமல் டானிக் பென்செடைல், வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு அதிக தேவை இருப்பதால் இந்தியாவிலிருந்து கடத்தப்படுகிறது. முழு கடத்தல் வலையமைப்பையும் அகற்ற தொடர் விசாரணை நடந்து வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

banned cough tonic benzodyl was seized


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->