பெங்களுருவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பெங்களுருவில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் - நடந்தது என்ன?

காவிரி நீர் திறந்து விடுவது தொடர்பாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாடுக்கு இடையே மோதல் இருந்து வந்துள்ளது. காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்த கர்நாடகம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசுதாக்கல் செய்த செய்த மனு கடந்த 21-ந் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த உத்தரவை அடுத்து காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதனைக் கண்டித்து மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் கடந்த 23-ந் தேதி முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்நாடக நீர் பாதுகாப்பு குழு, பெங்களூருவில் 26-ந் தேதி (அதாவது இன்று) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. 

அந்த அறிவிப்பின் படி பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணி வரை நடக்கிறது. இதனால், பெங்களூருவில் பேருந்து, ஆட்டோ, வாடகை கார்கள், டாக்சிகள் ஓடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், திரையரங்குகள், கடைகள், வணிக வளாகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், அரசு-தனியார் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படுகிறது. இந்த முழுஅடைப்பு காரணமாக பள்ளிகளில் இன்று நடைபெற இருந்த காலாண்டு தேர்வு வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், போராட்டத்தின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

banth in bangaluru for cauvery water issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->