பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை? - கேரள ஆளுனர் ஆரிப் முகமது கேள்வி!
BBC Documentary KERALA GOVERNOR Arif Mohammad Khan
பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை? என்று கேரள ஆளுனர் ஆரிப் முகமது கான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்போது அம்மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி (தற்போது நம் பிரதமர்) அவர்களுக்கு, பல கேள்விகளை எழுப்பி இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது .
இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டது என்று, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த ஆவணப்படத்தை தடை செய்தும் உத்தரவிபிட்டது.
இந்நிலையில், "பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து பிபிசி ஏன் ஆவணப்படம் எடுக்கவில்லை? இந்தியா துண்டு துண்டாக உடைந்து விடும் என்றவர்களிடமிருந்து இந்த முயற்சி வந்துள்ளது" என்று கேரள ஆளுனர் ஆரிப் முகமது கான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருவதை உலகம் அறியும். அது பிபிசி செய்தி நிறுவனத்திற்கு பிடிக்கவில்லை. இந்தியா நன்றாக இருப்பதை எண்ணி மிகவும் அந்த நிறுவனம் போன்று சில கவலைப்படுகின்றனர்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் அட்டூழியங்கள் குறித்து ஏன் பிபிசி ஆவணப்படம் எடுக்கவில்லை?. நீதித்துறையின் தீர்ப்புகளை விட இந்த ஆவணப்படத்தை சிலர் நம்புகின்றனர்" என்று ஆளுநர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
English Summary
BBC Documentary KERALA GOVERNOR Arif Mohammad Khan