நிதிஷ் குமார், நவீன் பட்நாயக்கிற்கு பாரத ரத்னா வேண்டும்..மத்திய அமைச்சர் விருப்பம்! - Seithipunal
Seithipunal



ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளனர்.

நிதிஷ் குமார்:

1989 ஆம் ஆண்டு முதல் முறையாக எம்.பி. ஆன நிதிஷ், 1998 முதல் 2001 வரை அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.2001 முதல் 2004 வரை வாஜ்பாய் அரசில் ரயில்வே அமைச்சராக இருந்தார் நிதிஷ்.

ஒன்பதாவது முறையாக பிகார் முதலமைச்சராக பதவியேற்றுள்ள நிதிஷ்குமார், ஏற்கனவே பாஜகவுடன் இருந்துள்ளதாகவும், இனி அங்கும் இங்கும் செல்லப் போவதில்லை என்று முதலமைச்சராக பதவியேற்றபோது  கூறினார்.

நவீன் பட்நாயக்:

ஒடிசாவின் முதல்வராக, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார். கடந்த 25 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் பதவியை (ஜூன் 05) நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார். கடந்த 2000ம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை முதல்வராக இருந்து வந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவரது தொண்டர்களை கவலை அடைய செய்துள்ளது.

இந்தநிலையில் ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளனர்.

நிதிஷ் குமார் பீகார் மாநில முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளார். "பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும் என்றும் . நிதிஷ் குமார் பல வருடங்களாக முதல்வராக இருந்து வருகிறார் என்றும் . நவீன் பட்நாயக் ஒடிசாவிற்காக பல வருடங்காளக பணியாற்றியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான ராஜீவ் ரஞ்சன் "2025 பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையின் கீழ் என்டிஏ போட்டியிடும்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharat Ratna for Nitish Kumar Naveen Patnaik The Union Minister's Choice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->