தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு "பாரதிய பாஷா" விருது!
Bharatiya Bhasha Award announce 2025
தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு, பாரதிய பாஷா பரிஷத் அமைப்பின் எழுத்தாளர் பாராட்டும் மிக முக்கியமான பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் அவர், 2018ஆம் ஆண்டு 'சஞ்சாரம்' நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருதை பெற்றவர். இதற்கு முன் ஞானவாணி, தாகூர், இயல், மாக்சிம் கார்க்கி, இலக்கியச் சிந்தனை, கலைஞர் பொற்கிழி, தமிழ்நாடு அரசின் விருது, கொடீசியா வாழ்நாள் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
அவரது இலக்கியங்கள் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, ஹிந்தி, அரபு, மலையாளம், தெலுங்கு, வங்காளம், கன்னடம், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இந்த பாராட்டுக்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், மே 1 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ள விழாவில், பாரதிய பாஷா பரிஷத் நிறுவனம் சார்பில் ராமகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்படும். இதனுடன் ரூ.1 லட்சம் பணப்பரிசும் அளிக்கப்படுகிறது.
English Summary
Bharatiya Bhasha Award announce 2025