தேர்தல் முடிந்தவுடன் ராஜினாமா? அதிரவைக்கும் இண்டியா கூட்டணி தலைவரின் கணிப்பு! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து வரும் நிதிஷ்குமார் ஏற்கனவே பாஜக உடனான கூட்டணியை முடித்துக்கொண்டு, லாலு பிரசாத் ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று கொண்டார்.

பின்னர் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன், லாலுக் கட்சியுடன் கூட்டணி தொடர்பை முறித்து கொண்டு, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதலமைச்சராக பதவி ஏற்றார். 

இந்த நிலையில், தேர்தல் முடிவடைந்து பாஜக ஆட்சியை இழந்து விடும் என்றும், அப்போது நித்திஷ் குமார் மிகப்பெரிய ஒரு முடிவை எடுப்பார் என்றும், லாலு பிரசாத் யாதவின் மகனும் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி  யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் மோடி இந்த தேர்தலில் தோல்வி அடைந்து விடுவார். 4-ம் தேதிக்கு பிறகு அவரால் பிரதமராக இருக்க முடியாது. 

நம் நாடு புதிய அரசை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது. என்னுடைய மாமா நித்திஷ் குமார் பற்றி ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

பாஜக கூட்டணி ஆட்சியை இழந்த பிறகு, அவர் மிகப்பெரிய ஒரு முடிவை எடுக்க வாய்ப்புள்ளது. அவர் எங்களுக்கு துரோகம் செய்வது பற்றி நாம் பிறகு பேசிக் கொள்ளலாம். தற்போது என்னுடைய கணிப்பு என்னவென்றால், அவருடைய கட்சியை காப்பாற்றுவதற்காகவும், ஓபிசி ஆதரவு அரசியலை பாதுகாக்கவும் அவர் நிச்சயமாக ஒரு மிகப்பெரிய முடிவை தேர்தலுக்கு முடிவுக்கு பின்னர் எடுப்பார். இதுதான் என்னுடைய கணிப்பு என்று தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

(ராஜினாமா செய்துவிட்டு, புதிய கூட்டணியுடன் முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்பார் என்பதை தான் அந்த மிகப்பெரிய முடிவு என்கிறார் தேஜஸ்வி)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhihar State CM May be Alliance change Tejashwi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->