பீகார் முதல்வரின் உறுதியான முடிவு! மதுவுக்கு அடிமையானவர்கள் நாளுக்கு நாள் பலி!
Bihar drinking fake liquor 2 people died
பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு கண் பார்வை பறிபோனது.
பீகார், குவாசி முகமதுபூா் பகுதியைச் சேர்ந்த கிராமவாசிகள் பலரும் சிவச்சந்திரன் பாஸ்வான் என்பவரின் மனைவி மற்றும் அவரது மகளிடம் 2 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர்.
அவர்களுக்கு அடுத்த நாள் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் உடல்நிலை மிகவும் மோசமானது.
இதனை அடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் உமேஷ் ஷா, பம்பரம் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
பலரும் கண்பார்வை இழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்த மேலும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் சிலரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்பனை செய்த சிவசந்திரன் பாஸ்வான் குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு மதுவிலக்கை அமல்படுத்தியது. இந்நிலையில் சட்டத்துக்கு புறம்பாக பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் போன்ற மது விற்பனை நடைபெற்று வருகிறது.
இது போன்ற மதுபானங்களில் இரசாயன பொருட்கள் கலப்பதால் விஷமாக மாறிவிடுகிறது. இந்நிலையில் மதுவிலக்கை தளர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் முழு மதுவிலக்கு முடிவில் இருந்து பின் வாங்க போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.
English Summary
Bihar drinking fake liquor 2 people died