ஞானபீட விருது பெற்ற  திரு.தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே பிறந்ததினம்!. - Seithipunal
Seithipunal


 இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற  திரு.தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே அவர்கள்.பிறந்ததினம்!.

 வரகவி என்ற சிறப்பு பெயர் கொண்ட கன்னடக் கவிஞர் த.ரா.பேந்திரே 1896ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி கர்நாடக மாநிலத்திலுள்ள தார்வாடு என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் தத்தாத்திரேய ராமச்சந்திர பேந்திரே ஆகும். மேலும் இவர் அம்பிகாதனயதத்தா என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். இந்த பெயரின் அர்த்தம் அம்பிகாவின் மகன் தத்தன் என்பதாகும்.

இவருக்கு கர்நாடக குல திலகம் என்ற பெயரும் உண்டு. இவர் பேச்சு நடையிலேயே கவிதைகளை எழுதினார். இவரது பாடல்களில் நாட்டுப் புற நம்பிக்கைகள், புராணக் கதைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள் இருக்கும். இவருக்கு 1968ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1958ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதும், 1973ஆம் ஆண்டு ஞானபீட விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருதான ஞானபீட விருது பெற்ற இவர் தன்னுடைய 85வது வயதில் 1981 அக்டோபர் 26 ஆம் தேதி அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Birthday of Jnanpith Award winner Shri Dattatreya Ramachandra Bendre


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->