ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம்
BJP JP Nadda Condemn to BSP Armstrong hacked to death
சென்னை பெரம்பூரில் நேற்று இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்ட அடுத்த மூன்று மணி நேரத்தில், ஆற்காடு பாலா உள்ளிட்ட எட்டு பேர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
மேலும் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலையை, அவரின் பிறந்த நாளிலேயே செய்து முடித்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இது குறித்து சென்னை காவல் ஆணையர் தெரிவிக்கையில், இந்த கொலை அரசியல் கொலை இல்லை என்றும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும், சென்னை பாதுகாப்பான நகரமாக திகழ்வதாகவும் தெரிவித்திருந்தார்.
அதே சமயத்தில் இந்த கொலை சம்பவத்திற்கு அதிமுக, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கின் கொடூரமான படுகொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் கொலையானது, சமூகத்தில் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினரைப் புறக்கணிப்பதையும், மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது
குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும்" என வலியுறுத்தி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
English Summary
BJP JP Nadda Condemn to BSP Armstrong hacked to death