தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரம்ஜான் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


இன்று நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு, நடிகர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;- "புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பா.ஜ.க சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவருக்கும் இந்த தினம், அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆசீர்வாதங்களையும் தந்து, அனைவர் வாழ்விலும் அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், நல்லிணக்கம் மற்றும் செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள்." என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp leader annamalai ramjan wishes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->