பண்ணை வீட்டில் பலான தொழில் நடத்திய பாஜக தலைவர்.. ஜாமீனில் விடுதலை.! - Seithipunal
Seithipunal


அசாம் மாநில பா.ஜ.க. துணைத் தலைவர் பெர்னார்டு என். மராக் ரிம்பு என்பவருக்கு மேற்கு கரோ என்ற மலைப்பகுதியில் பண்ணை வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் அவ்வபோது ஆண்கள் மற்றும் இளம் பெண்களின் வருகையும் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

பா.ஜ.க நிர்வாகி வீடு என்பதால் காவல்துறையினர் தயக்கம் காட்டியதாக கூறப்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மராக் ரிம்பு பண்ணை வீட்டில், தனிப்படை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்

அந்த சோதனையில் வீட்டில் இருந்த 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி என 5 பேரை மீட்ட போலீஸார் அவர்களை குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பண்ணை வீட்டை பூட்டில் சீல் வைத்தனர்.

மேலும் குழந்தைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தவர்கள் உட்பட 73 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். கட்டிட வடிவமைப்பை பார்க்கும் போது, மராக் ரிம்பு மற்றும் அவரது கூட்டாளிகள் பாலியல் தொழில் செய்வற்காகவே விடுதி போல நடத்தி வந்தது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, கட்டுகட்டாக ஆணுறைகள் மற்றும் மதுபான பாட்டில், ஆயுதம் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதன்பின் தலைமறைவாகிய பாஜக நிர்வாகி மரக்கை உத்தர பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மேகாலயா உயர்நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. தலைமறைவாகவோ அல்லது ஆதாரங்களை சிதைக்கவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ கூடாது என்றும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பாஜக நிர்வாகி மராக் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader ran prostition in farm house arrested Released on bail


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->