ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் - பயணிகளின் நிலை என்ன?
flight left running way in russia
ரஷ்யாவில் விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகியதால் பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ரஷியா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஏர்பஸ் A321 விமானம் 79 பயணிகளுடன மத்திய ரஷியாவில் உள்ள நோரில்ஸ்க் விமான நிலையத்திற்குச் சென்று தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதனால், விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்றது. இதை அறிந்த பயணிகள் பயத்தில் அலறத் தொடங்கினர். உடனே சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை நிறுத்தினார்.
இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து பயணிகள் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
flight left running way in russia