மீண்டும் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பசுமை தீர்ப்பாயம்!
Green Tribunal medical waste case kerala govt
தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தமிழகத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தைத் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
ஒன்றையே வழக்கு வீணையில், கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 390 டன் மருத்துவ கழிவுகள் 30 டிரக்குகளின் மூலம் அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து, தீர்ப்பாய நீதிபதிகள், "7 நாட்கள் ஆகி விட்ட நிலையில் ஏன் இன்னும் முறையான அறிக்கை சமர்ப்பிக்கவில்லை? கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டிய மருத்துவமனைக்கு எதிராக ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?" என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், "மருத்துவமனை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், தீர்ப்பாயம் நேரடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும். தமிழகத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவது உடனடியாக நிறுத்த வேண்டும்," எனக் கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
தமிழக எல்லை மாவட்டங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கை ஜனவரி 20-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
English Summary
Green Tribunal medical waste case kerala govt