#BREAKING:: மகாராஷ்டிரா கஸ்பா பெத் தொகுதியில் பாஜக படுதோல்வி.. 30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைத்த காங்கிரஸ் கூட்டணி..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், அருணாச்சல பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சின்ச்வாட் தொகுதியில் பாஜக வேட்பாளராக அஸ்வினி லட்சுமணன் என்பவரும், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வித்தால் அலியாஸ் என்பவரும் போட்டியிட்டனர்.

அதேபோன்று கஸ்பாபெத் தொகுதியில் பாஜக வேட்பாளராக ஹெமண்ட் நாராயண ரசானே என்பவரும் காங்கிரஸ் வேட்பாளராக தனஜேகர் ரவீந்திர ஹேம்ராஜ் என்பவரும் போட்டியிட்டனர். 

இன்று காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் சின்ச்வாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் அஸ்வினி லட்சுமணன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இவர் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,929 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 

அதேபோன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் மற்றொரு தொகுதியான கஸ்பாபெத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தனஜேகர் ரவீந்திர ஹெம்ராஜ் 72,599 வாக்குகளும், பாஜக வேட்பாளர் ஹெமந் நாராயண் ராசானே 61,771 வாக்குகளும் பெற்ற நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

கஸ்பாபெத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்ற உள்ளது. இந்த தொகுதியில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மகராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு பிறகு நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைமையான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP lose in Kasba peth constituency in Maharashtra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->