அம்பேத்கர் மக்களிடம் பிச்சை எடுத்தாரா..?? பாஜக அமைச்சர் முகத்தில் கருப்பு மை வீசிய மர்ம நபர்..!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மகாராஷ்டிரா மாநில உயர் மற்றும் தொழில்நுட்பத்துறை கல்வி அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் "அம்பேத்கரும் பூலேவும் கல்வி நிறுவனங்கள் தொடங்குவதற்காக அரசு மானியத்தை நாடவில்லை. பள்ளி, கல்லூரிகளை தொடங்குவதற்கான நிதியை மக்களிடம் பிச்சை கேட்டனர்" என விமர்சனம் செய்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்த நிலையில் பிம்ப்ரி நகருக்கு சென்ற அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் முகத்தின் மீது மர்ம நபர் ஒருவர் கருப்பு மை வீசியுள்ளார். ஒரு கட்டிடத்திற்குள் சென்று விட்டு வெளியே வந்த அமைச்சர் மீது கருப்பு மை வீசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். அமைச்சர் மீது கருப்பு மை வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக சின்ஸ்வாட் காவல் ஆணையர் அங்குஷ் சிண்டே தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் மற்றும் பூலே குறித்தான சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ள மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் "அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீலின் கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. அமைச்சர் பாட்டீல் தவறான வார்த்தை பயன்படுத்து இருந்தாலும் அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் மற்றும் கல்வியாளர் பௌராவ் பாட்டீல் போன்றவர்கள் கல்வி நிறுவனங்களை நடத்துவதற்கு அரசாங்கத்திடம் இருந்து பணம் வாங்கவில்லை என்பதை பொருள் படும் வகையில் அவர் பேச முயன்று உள்ளார்" என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் "டாக்டர் அம்பேத்கரையும் மகாத்மா பூலேவையும் நான் எப்பொழுது விமர்சித்தேன்? 

அவர்கள் பள்ளிகளை தொடங்க அரசின் நிதி உதவிக்கு காத்திருக்காமல் பிச்சை எடுத்தார்கள் என சொன்னேன். சிலர் நீதிமன்றத்தில் நீதிக்காக மன்றாடுகிறேன் என சொல்கிறார்கள். பிச்சை என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறா? என் மீது கருப்பு மை வீசுவதால் ஒன்றும் ஆகாது. அங்கிருந்து சட்டையை மாற்றிக் கொண்டு நகர்ந்தேன்" என பேசியுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP minister slapped with black ink on face for criticized Ambedkar for begging


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->