தாஜ் மஹாலை இடிங்க..இந்து "கோவில் கட்டுங்க"..!! பாஜக எம்எல்ஏ.,வின் சர்ச்சை பேச்சு..!!
BJP MLA said TajMahal demolishes and Hindu temple built
தாஜ்மஹால் காதலின் சின்னம் அல்ல..!!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ரூப்ஜோதி குருமி தாஜ்மஹால் ஒன்றும் காதலின் சின்னம் அல்ல என்றும் தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடித்துவிட்டு கோயில்களை கட்ட வேண்டும் எனவும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பேசிய அவர் "முகலாயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை இடிக்க வேண்டும். 1526ம் ஆண்டு முகலாயர்கள் இந்தியாவுக்கு வந்து தாஜ்மஹாலை உருவாக்கியுள்ளனர். இந்து மன்னர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் தான் ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டியுள்ளார். எனவே இவை அனைத்தும் எங்களுடைய பணம்.
ஷாஜகான் தான் மணந்த ஏழு மனைவிகளில் நான்காவது மனைவியான மும்தாஜ் நினைவாக தாஜ்மஹாலை கட்டியுள்ளார். அவர் உண்மையில் மும்தாஜை நேசித்து இருந்தால் எதற்காக அதன்பிறகு சில பெண்களை திருமணம் செய்தார்?
எனவே இது காதலின் சின்னம் அல்ல. தாஜ்மஹால் மற்றும் குதுப்மினாரை உடனடியாக இடித்துவிட்டு அந்த இடங்களில் உலக அளவில் சிறப்பான வடிவமைப்புடன் கொண்ட கோயில்களை கட்ட வேண்டும். கோயில் கட்டுவதற்கு எனது ஓராண்டு சம்பளத்தை நன்கொடையாக அளிக்கவும் தயாராக உள்ளேன்" என பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
BJP MLA said TajMahal demolishes and Hindu temple built