மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாஜக பெண் எம்பி!
BJP MP support to wrestlers protest
"மிகவும் தீவிரமான குற்றச்சாட்டை எந்தப் பெண் முன் வைத்தாலும், அதன் மீது உரிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று, டெல்லி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பாஜகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் ப்ரீதம் முண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் கொடுத்து இதுவரை இந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, மல்யுத்த வீராங்கனைகளும், அவர்களுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக பாஜக எம்பி ஒருவரே கருத்து தெரிவித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி ப்ரீதம் முண்டே, போராடிவரும் வீராங்கனைகளை சரியான முறையில் அரசு அணுகி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அணுகவில்லை.
மிகவும் தீவிரமான குற்றச்சாட்டை எந்தப் பெண் முன் வைத்தாலும், அதன் மீது உரிய கவனம் செலுத்தி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, ப்ரீதம் முண்டேவின் இந்த கருத்துக்கு, அவரின் சகோதரியும் பாஜகவின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே எதிரான கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், "தனது சகோதரி பாஜகவில் உள்ளார். ஆனால் பாஜக அவருக்கு ஒன்றும் சொந்தம் கிடையாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP MP support to wrestlers protest