கேரள அரசின் அலட்சியம் தான், நூற்றுக் கணக்கானவர்களை பலி வாங்கியிருக்கிறது - பரபரப்பு டிவிட்!
BJP Narayanan thirupathy say about Kerala Vayanadu landslide
இன்று மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு குறித்து கொண்டுவரப்பட்ட சிறைப்பட்டு தீர்மானத்திற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "நிலச்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று ஜூலை 23ம் தேதியன்றே, கேரள அரசுக்கு முன்னெச்சரிக்கை அபாய அறிவிப்பை விடுத்ததோடு, மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற ஒன்பது தேசிய பேரிடர் நிவாரணக் குழுக்களை கேரளாவுக்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால், கேரள அரசு என்ன செய்தது? மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியிருந்தால், இவ்வளவு உயிரிழப்புகள் எவ்வாறு ஏற்பட்டன?
கடந்த 2016ம் ஆண்டு முன்னெச்சரிக்கை அபாய திட்டம் அமல்படுத்தப்பட்டதோடு, 2023ம் ஆண்டில் நவீன எச்சரிக்கை தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏழு நாட்களுக்கு முன்னரே இது போன்ற பேரிடர்களை கணிக்கும் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று" என அமித்ஷா பதிலளித்திருந்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கூறியுள்ளது, கேரள கம்யூனிஸ்ட் அரசின் அலட்சியத்தை, நிர்வாக சீர்கேட்டை உணர்த்துகிறது.
இது வரை நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்களின் நிலை அறியாமல் இருக்கும் நிலை கொடியது. ஒரு வாரத்திற்கு முன்னரே இது போன்ற நிலை வரும் என எச்சரித்தும் மக்களை எச்சரிக்கையாக பாதுகாப்பான இடத்திற்கு மாற்றாதது ஏன்?
பெரும் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்படக்கூடிய நிலையில், பெரும் உயிரிழப்பு நிகழக்கூடும் என்பதை முன்கூட்டியே மத்திய அரசு எச்சரித்திருக்கிறது. ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்தியாவில் ஒரே ஒரே மாநிலத்தில் ஆட்சியை செலுத்திக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் அரசின் அலட்சியம் நூற்றுக் கணக்கானவர்களை பலி வாங்கியிருக்கிறது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan thirupathy say about Kerala Vayanadu landslide