#பாஜக:: மோடி மற்றும் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி நன்றி சொல்ல வேண்டும்...!!!
BJP said Rahul Gandhi should thank to Modi and Amit Shah
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரின் லால் சவுத் பகுதியில் தேசிய கொடியை ஏற்றினார்.
அந்த விழாவில் பேசிய ராகுல் காந்தி பாஜகவினரால் இதுபோன்ற சுதந்திரமாக ஜம்மு காஷ்மீரில் நடந்து வர முடியாது. காஷ்மீரிகள் கையெறி குண்டுகளை வீசுவார்கள் என என்னை எச்சரித்தனர் ஆனால் காஷ்மீரிகள் எனக்கு அன்பை மட்டுமே பொழிந்தனர் என பேசி இருந்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜகவினர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டா மிஸ்ரா "காஷ்மீரின் 370 வது சட்டப்பிரிவை ரத்து செய்ததால் தான் ராகுல்காந்தியால் அங்கு அமைதியான சூழலில் தேசிய கொடி ஏற்ற முடிந்தது. எனவே சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவை நீக்கியதற்காக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி நன்றி சொல்ல வேண்டும்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாஜக தலைவர்கள் காஷ்மீருக்கு சென்ற போது அவர்கள் ராக்கெட் லாஞ்சர்களால் தாக்கப்பட்டனர். இந்தியாவின் ஒற்றுமை பயணம் என்ற பெயரில் மேற்கொண்ட நடை பயணத்தின் மூலம் நாடு பிரிந்துள்ளது என்பதை காட்ட வேண்டும் என முயற்சித்தனர். ஆனால் அவர்களால் அவ்வாறு காட்ட முடியவில்லை. இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரை அவர்கள் பயன்படுத்தி இருக்கக் கூடாது" என விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
BJP said Rahul Gandhi should thank to Modi and Amit Shah