மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்.!
bomb thread to maharastra ex chief minister eknath shinde
நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், பேருந்து நிலையம் என்று பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதும், தீவிர விசாரணைக்கு பிறகு அது போலி என்று தெரிய வருவதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய துணை முதலமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கோரேகான், ஜே ஜே மார்க் காவல் நிலையங்களுக்கும், மாநில அரசின் தலைமையகமான மந்திராலயாவில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இந்த அழைப்பை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேவிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை மிரட்டல் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
English Summary
bomb thread to maharastra ex chief minister eknath shinde