டெல்லி விமான நிலையத்திற்கு வந்த தனியார் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜெய்சால்மர் நகரில் இருந்து தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்து இறங்கியது. அந்த விமானத்தின் இருக்கையின் பின்புறம் இந்தியில், இந்த விமானத்தில் வெடிகுண்டு உள்ளது என்ற தகவல் எழுதப்பட்டுள்ளது. 

இதை பார்த்த பயணி ஒருவர் மற்ற பயணிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் இருந்தனர். இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் தனியார் விமான நிறுவனம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளது. 

அதன் பின்னர், அந்த விமானம் ஒரு தனியான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமானம் முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

ஆனால், அந்த விமானத்தில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என்பதும் அது வெறும் புரளி என்பதும் பின்னர் தான் தெரிய வந்தது. விமானத்தின் இருக்கையில் வெடிகுண்டு மிரட்டல் செய்தியை எழுதிய அந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat in delhi international airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->