மும்பை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்.! - Seithipunal
Seithipunal


மும்பை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் பெண் ஒருவர் கொல்கத்தாவிற்கு செல்ல இருந்தார். அங்கு வழக்கம் போல் சோதனை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பெண்ணின் பை அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடை இருந்தது. அதனால், விமான நிறுவன ஊழியர்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்துமாறு அந்த பெண்ணிடம் தெரிவித்தனர். உடனே அந்த பெண், தனது பையில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அந்த பெண் பயணியின் பையை சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவரது பையில் சந்தேகத்திற்கு இடமாக எந்தவொரு பொருளும் இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் விமான நிறுவன ஊழியர்கள் வெடிகுண்டு புரளி கிளப்பிய பெண்ணை பிடித்து சகார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் படி போலீசார் அந்த பெண்ணை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bomb threat in mumbai international airpot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->